, “கர்நாடகாவில் தனது ஊனமுற்ற மகனை பள்ளிப் பேருந்தில் ஏற்றுவதற்கு உதவியபோது, தாயும் மகனும் மின்சாரம் தாக்கி துடிதுடித்த அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கல்புர்கி மாவட்டத்தில் பாக்யஸ்ரீ (34) என்ற பெண் தனது மகனை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட முயன்றுள்ளார்.

அப்போது பள்ளி பேருந்தின் மீது ஏற்கனேவே அறுந்து விழுந்த மின்சார கம்பி பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பாக்யஸ்ரீ துடிதுடித்தார்.

பின்னர் ஓட்டுநர் பேருந்தை முன்னோக்கி நகர்த்தினார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த பெண்ணையும் அவரது மகனையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாக்யஸ்ரீயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகனின் உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.இது சம்பவம் குறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் மின்சாரத்துறையினர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version