“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வரவிருக்கும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் சலோமி. ஆனால் இது பாரம்பரிய போர் போன்று அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் என்றும் கூறி பீதியை கிளப்பியுள்ளார்.

இதற்கு முன் கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது (இப்போது X என மறுபெயரிடப்பட்டுள்ளது) மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னரே கணித்த சலோமி, இனி நடக்கப் போகும் நவீன போரில் மனிதகுலம் மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாக நம்புகிறார். “இது மனிதர்களின் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர்” என்று சலோமி கூறுகிறார்.

இந்தப் புதிய வடிவிலான போருக்கு முன்னோடியாக உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வருவதை, குறிப்பாக உக்ரைனுடனான போரில் டினிப்ரோ நகரத்தை குறிவைத்து ஓரேஷ்னிக் சூப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவியதை சலோமி சுட்டிக்காட்டுகிறார். சலோமியின் கூற்றுப்படி, மேம்பட்ட ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால் நவீன போர்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ரஷ்யாவைத் தவிர, மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் உலகளாவிய ஸ்திரத்தன்மையின் பலவீனமான நிலைக்கு பங்களிக்கின்றன. மேற்கத்திய நாடுகளின் ஈடுபாட்டுடன் இணைந்து மேற்கொள்ளபடும் இந்த பிராந்திய மோதல்கள் பெரிய அளவிலான தொழில்நுட்ப மோதலுக்கான சூழ்நிலையை உருவாக்குகின்றன என்றும் சலோமி பரிந்துரைக்கிறார்.

சலோமியின் முன்னறிவிப்புகள், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸின் புதிரான தீர்க்கதரிசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. “அழிவின் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் நாஸ்ட்ராடாமஸ், நடக்கப்போகும் பேரழிவுகளை முன்னறே அறிவித்தது இன்று வரை ஆராய்ச்சியாளர்களையும் பொதுமக்களையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

கடந்த கால நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக அறிவிப்பதன் காரணமாக வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என அழைக்கப்படுகிறார் சலோமி. 2024-ம் ஆண்டில் மட்டும், எரிகற்கள் அச்சுறுத்தல் உட்பட தனது நான்கு கணிப்புகள் உண்மையாகிவிட்டதாக அவர் கூறுகிறார். உலகளாவிய மோதல்களின் வளர்ந்து வரும் தன்மையுடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இணைக்கும் அவரது திறன் அவரது கணிப்புகளுக்கு ஒரு சமகால பரிமாணத்தை சேர்க்கிறது.

சலோம் கணித்தபடி எதிர்கால மோதல்கள் வழக்கமான ஆயுதங்களுக்குப் பதிலாக, சைபர்ஸ்பேஸ் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் மூலம் நடைபெறலாம். இந்த மாற்றம் உலகளாவிய புவிசார் அரசியலில் ஆழமான தாக்கங்களைக் கொண்டு வரும். மேலும் இன்றைய காலங்களில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவாதங்களில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பாதிப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

சலோமின் கணிப்புகள் ஊகமாக இருந்தாலும், அவை தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் சிக்கலான சவால்களை நமக்கு நினைவூட்டுகின்றன. “தொழில்நுட்பப் போரின்” சாத்தியம், போரில் இயந்திரங்களின் பங்கு, உலகளாவிய அமைப்புகளின் ஸ்திரத்தன்மை மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தை வழிநடத்தும் மனிதகுலத்தின் திறன் பற்றிய முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது.

சலோமியின் முன்னறிவிப்புகள் நடக்கிறதோ இல்லையோ, மேம்பட்ட தொழில்நுட்பங்களின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்கள் உடனடி கவனத்தை கோருகின்றன.

உலகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கையில், ஒரேயொரு கேள்வி தான் கேட்கத் தோன்றுகிறது: நாளைய போர்களுக்கு மனிதகுலம் தயாராகிவிட்டதா?

Share.
Leave A Reply

Exit mobile version