கண்டி – ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (28) பெண்குழந்தை விபத்தில் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

தாயும் தந்தையும் 01 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய தங்கள் பெண்குழந்தையுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

அங்கு லொறி இயக்கி முன்னோக்கி செலுத்தப்பட்டபோது குழந்தை லொறியின் பின்சக்கரத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அட்டபகொல்ல ஹசலக்க பிரதேசத்தில் வசிப்பவர்களின் குழந்தையே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version