பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகள் வீட்டின் மீது மாப்பிள்ளை வீட்டார் விமானம் மூலம் பண மழை பொழியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தத் திருமணத்துக்கென்று மாப்பிள்ளை வீட்டார் விமானத்தை வாடகைக்கு எடுத்ததாகவும், மணமகள் வீட்டை நோக்கி லட்சக்கணக்கில், பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள், விமானத்திலிருந்து அள்ளி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடம்பர திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா செய்வது, ஆணவத்தின் உச்சம் இது என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version