வவுனியா, பாவற்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டி மீது பஸ்ஸொன்று மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (31) மாலை மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பஸ்ஸை செலுத்திய வேளையில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் வீதியை ஊடறுத்துச் செல்ல முற்பட்ட போது பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.

இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனைகள் வவுனியா செட்டிக்குளம் மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version