சென்னை: இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ இருவரும் தொடர்ந்து பிசியாக இருந்து வருகின்றனர்.
தயாரிப்பு, நடிப்பு, அரசியல் என ஒருபுறம் நடிகை குஷ்பூ பிசியாக இருக்கும்நிலையில், மறுபுறம் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என சுந்தர் சியும் பிசியாகவே காணப்படுகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது.
அடுத்ததாக கலகலப்பு 3 மற்றும் மூக்குத்தி அம்மன் 2 படங்களை இயக்க சுந்தர் சி கமிட்டாகியுள்ளார்.
இதில் கலகலப்பு 3 படத்தை அவரது அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த இரு படங்களில் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இந்தப் படங்களின் சூட்டிங் துவங்கவுள்ளது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ இருவரும் தொடர்ந்து பிசியாக இருந்து வருகின்றனர். தயாரிப்பு, நடிப்பு, அரசியல் என ஒருபுறம் நடிகை குஷ்பூ பிசியாக இருக்கும்நிலையில், மறுபுறம் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என சுந்தர் சியும் பிசியாகவே காணப்படுகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது.
அடுத்ததாக கலகலப்பு 3 மற்றும் மூக்குத்தி அம்மன் 2 படங்களை இயக்க சுந்தர் சி கமிட்டாகியுள்ளார்.
இதில் கலகலப்பு 3 படத்தை அவரது அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த இரு படங்களில் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இந்தப் படங்களின் சூட்டிங் துவங்கவுள்ளது.
சவுந்தர்யா மீது கிரஷ்: அடுத்தடுத்து இரு படங்களை இயக்கவுள்ள சுந்தர் சி, அடுததடுத்த பேட்டிகளின்மூலம் ரசிகர்களிடையே இணைந்துள்ளார்.
அப்படி ஒரு பேட்டியில் பேசும்போது, தான் குஷ்பூவை பார்க்காமல் அவரிடம் காதலை சொல்லாமல் இருந்திருந்தால்,மற்றொரு நடிகையைத்தான் தேர்ந்தெடுத்து இருந்திருப்பேன் என்று சுந்தர் சி கூறியுள்ளார்.
நடிகை சவுந்தர்யாவை தனக்கு அப்படி பிடித்திருந்ததாகவும் அவர் மீது அதிகமான கிரஷ் காணப்பட்டதாகவும் சுந்தர் சி கூறியுள்ளார்.
சவுந்தர்யா மிகவும் சிறப்பான கேரக்டர் என்றும் அவரை போன்ற ஒரு பெண்ணை பார்ப்பது அபூர்வம் என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
குஷ்பூவுடனான காதல்: முறைமாமன் படத்தின் சூட்டிங்கின்போது தனக்கு சுந்தர் சி அதிகமான சலுகைகளை கொடுப்பார் என்றும் தன்னிடம் அவரது காதலை கூறாமல் தன்னுடைய அம்மாவிடம்தான் முதலில் கூறினார் என்றும் முன்னதாக பேட்டியொன்றில் குஷ்பூ கூறியுள்ளார்.
அவர் தன்மீது காட்டிய அக்கறை தன்னை நெகிழ வைத்ததாகவும் அவர் உற்சாகத்தை பகிர்ந்திருந்தார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தபோதிலும் சுந்தர் சி மனதில் இப்படியொரு கிரஷ் இருந்தது தற்போது வெளிப்பட்டுள்ளது.