“இணையத்தின் தாக்கம் காரணமாக உலகின் எந்த மூலையிலும் வித்தியாசமான சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது.
அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேற்று கிரக வாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், மேகங்கள் மீது மனிதர்களின் தோற்றம் போன்ற வேற்று கிரக வாசிகள் நின்று கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ விமானத்தில் பயணித்து கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது போல உள்ளது.
அதில், மேகங்களில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை 3-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏலியன் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
அந்த உருவம் வேற்றுகிரக வாசிகள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் பயனர்கள் பலரும் ஏலியன்கள் தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை தூண்டி உள்ளது.
A passenger on a commercial airline captures what appears to be multiple beings standing on cloud cover, what is going on?#theparanormalchic #alien #airline #paranormal #ufo #fyp pic.twitter.com/CARF6XFGxD
— Myra Moore- The Paranormal Chic (@t_paranorm_chic) December 30, 2024