அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை, கோரக்கன்கட்டு பகுதியில் நேற்று (4) மாலை அறுவடை இயந்திரத்தை நீரிட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்ட தருணத்திலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் பைரவர் கோவிலடி பரந்தனைச் சேர்ந்த 31வயதான பிரான்சித் ரஜீவன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவரது வீட்டில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version