சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மனித மெட்டா நியூமோ வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் எந்த பயண வரவாறு இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version