“கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவர் மயக்க மருந்து செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மரணதண்டனையை ஏமன் உச்சநீதிமன்றம் 2022 இல் உறுதி செய்தது.
இதற்கிடையே கடந்த மாதம் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததாக கடந்த மாத இறுதியில் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜனாதிபதி எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
திங்களன்று, இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் கொடுக்கவில்லை.
செவிலியரின் முழு வழக்கும் நாட்டின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் கையாளப்படுகிறது.
பிரியா தற்போது தலைநகர் சனாவில் ஹவுதி போராளிகளின் அதிகாரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
பாதிக்கப்பட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.