“தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது.

இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார்

உயிரிழந்தார்.ஜல்லிக்கட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.”,

Share.
Leave A Reply

Exit mobile version