யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றையதினம் (13-01-2025) மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள ரயில் பாதையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதியுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் கொடிகாமம், வெள்ளாம்பொக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.