தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரைத் திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம்.

அவர் இயற்றிய திருக்குறள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அவரது படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

பலவகையான பிரச்சனைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து கடினமாகப் பணியாற்றுவோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version