வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்றைய தினம் வியாழக்கிழமை (16) யாழ். நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின்போது துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல் போன்றவற்றை வேலையில்லாப் பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னெடுத்தனர்.

இதன் ஆரம்ப நடவடிக்கையானது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி முன்றலில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாழ். நகர்ப் பகுதிக்குள் பேரணியும் துண்டுப்பிரசுரம் வழங்கலும் தொடர்ந்து விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

Share.
Leave A Reply

Exit mobile version