தெற்கு அதிவேக வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன், சுமார் 19 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

தங்காலை நோக்கிச் செல்லும் வீதியில் 138 ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் அதிவேகமாக பயணித்த பஸ் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது சுமார் 30 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பஸ்ஸில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version