மாத்தறை-தங்கல்ல பிரதான சாலையில் உள்ள கந்தரவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 62 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் அறுவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 35 பெண்கள், 26 வயதான நெதர்லாந்து பிரஜை உட்பட 27 ஆண்கள், மூன்று சிறார்கள், பஸ்ஸொன்றின் சாரதி மன்றும் இன்னுமிருவர் அடங்குகின்றனர் .
விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதமடைந்துள்ளன என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்