ஜேர்மனியின் பூங்கவொன்றில் இருவர் கத்திக்குத்து தாக்குதலில் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை அந்த நபர்இலக்குவைத்தார்,என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இவர் அந்த பகுதியில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களிற்கான நிலையத்தில் வசித்தவர் என ஜேர்மனியின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ள அதேவேளை இவர் உளவியல் பிரச்சினைகள் உள்ளவர் என மற்றுமொரு ஊடகம் செய்தி வெளியி;ட்டுள்ளது.

குழந்தையொன்றை காப்பாற்ற முயன்ற 41வயது நபரும் இரண்டு வயது சிறுவனும் கொல்லப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சந்தேகநபர் புகையிரதபாதையூடாக தப்பியோட முயன்றதைதொடர்ந்து அந்த பகுதியின் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் குடிவரவு கொள்கை குறித்து கடும் விவாதங்கள் ஜேர்மனியின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெறுகின்ற சூழ்நிலையில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version