“செல்போனை அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் போனுக்கு அடிமையாகும் சம்பவங்களையும் காண முடிகிறது.

நடக்கும் போது தொடங்கி வாகனம் ஓட்டும் போதும் கூட சிலர் செல்போன் பேசியபடியே செல்வதும், இதனால் அவர்கள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளது.

அது போன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்து கொண்டு செல்போன் பேசியபடியே நடந்து செல்கிறார்.

அப்போது சாலையோரம் ஒரு பாதாள குழி உள்ளது. அதில் பொது மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார். திடீரென அவர் குழந்தையுடன் அந்த பாதாள குழிக்குள் விழுவது போன்று அதிர்ச்சியான காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த தாயை விமர்சித்தனர். செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version