“புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன்,

முரளிராஜா ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வேங்கைவயலில் நீர்தேக்க தொட்டியில் 2 பேர் மலம் இருக்கும் பையுடன் அமர்ந்து பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சுதர்சன் வீடியோ எடுக்கிறான் என்று பேசும் ஆடியோவும் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோவை தொடர்ந்து சுதர்சனின் அம்மா, அத்தை பேசியதாக கூறப்படும் 2 ஆடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், எவ்ளோ கேட்டாலும் ஒத்துக்காதே, அடிச்சி கேட்டாலும் ஒத்துக்கவே ஒத்துக்காதே என்று சுதர்சனின் அம்மா பேசியுள்ளார்.

வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ, ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version