“சீன நிறுவனமான ஹெனான் மைன் கிரேன் தனது தொழிலாளர்களுக்கு 270 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்க போனஸை வழங்கியுள்ளது.
சீனாவில் 15 நிமிடங்களில் எண்ணக்கூடிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிறுவனம் ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை மேசையில் வைத்தது.
இந்த ஆண்டு இறுதியில் வழக்கமான போனசுக்குப் பதிலாக, சீன நிறுவனம் ஒரு தனித்துவமான நிகழ்வை ஏற்பாடு செய்தது.
அங்கு பெரிய மேஜையில் மிகப்பெரிய அளவில் ரூ.70 கோடி வைக்கப்பட்டது.நிறுவனம் 60-70 மீட்டர் நீளமுள்ள மேஜையில் பணத்தை அடுக்கி வைத்து, ஊழியர்களை 30 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பணத்தை எண்ணுமாறு கேட்டுக்கொண்டது.
பிறகு, ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணம் எடுக்க முடியுமா அவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஊழியர்கள் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது.போட்டி வேகமாக இருந்தது,
ஒவ்வொரு ஊழியரும் விரைவாக பணத்தைப் பிடுங்கி எண்ணத் தொடங்கினர். ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் 100,000 யுவான் (சுமார் S$18,700) வரை எண்ண எடுத்தார்.
அவர்கள் எடுத்த பணத்தை அவர்களுக்கே வழங்கப்பட்டது. இதன் வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது.