பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ஷ இந்த வழக்கில் ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version