குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 24 மணி நேரமும் இயங்கி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்குவதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடவுச்சீட்டுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தவும், பிற அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தற்காலிகமாக கடவுச்சீட்டுக்களை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version