யாழ். கோண்டாவில் பகுதியில் இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் அத்துமீறி உள் நுழைந்த குழுவினர், அண்மையில் இந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கோப்பாய் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தேடிவந்த நிலையில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் ஒரு சந்தேகநபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸார் கைது செய்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (10) அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடடுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version