“அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் பலர் காயமடைந்தனர்.ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும் அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் கெல்லி குஸ்டர் கூறும் போது, “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் வணிக ஜெட் விமானத்தின் மீது மற்றொரு வணிக ஜெட் விமானம் மோதியது.

டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து வந்த வந்த ஜெட் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே மோதல் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.காயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒருவர் மருத்துவமனையில் உள்ளார் என்று ஸ்காட்ஸ்டேல் தீயணைப்புத் துறையை சேர்ந்த டேவ் ஃபோலியோ தெரிவித்தார். மோதலில் உயிரிழந்த நபரின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்\” என்று ஃபோலியோ கூறினார். விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதை மூடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version