உலக நாடுகள் பொதுவாக பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டும். ஆனால் ஆப்ரிக்க நாடான கென்யா மனிதர்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

பெரிய அளவில் வளர்ச்சியடையாத கென்யாவில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இது குற்றங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இப்பிரச்சினைக்கு கல்வியறிவு பெற்றவர்களை வேலைக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஐரோப்பாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை கென்யா செய்து வருகிறது.

இதற்காக ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் அரசுகளுடன் கென்யா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மக்கள் தொகை குறைந்து உழைக்கும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதை பயன்படுத்திக்கொண்டு மனிதர்களை அங்கெல்லாம் கென்யா அனுப்பி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் மூலம் கென்ய பொருளாதாரம் செழிக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் கென்யா குடிமக்கள் வேலைக்காக உலகெங்கும் அனுப்பப்பட்டுள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 10 லட்சம் பேர் அனுப்பப்பட உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version