“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறை விஐபிகள் வரை வெவ்வேறு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

1960களில் நக்சல் பிரச்சனை ஏற்பட்டபோது இந்த பாதுகாப்பு முறைகள் தொடங்கப்பட்டன. புலனாய்வுத்துறை ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலை மதிப்பிட்டு, அதுபற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும்.

அதன் அடிப்படையில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப X, Y, Y+, Z, Z+ மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) என 6 வகையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றன.

SPG:

பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒரு சிறப்பு பாதுகாப்புப் பிரிவாக SPG உள்ளது.

1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்த அமைப்பு உருவானது. பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் திறமை வாய்ந்த சுமார் 3,000 பயிற்சி பெற்ற காவலர்கள் SPG கொண்டுள்ளது.

Z-பிளஸ் மற்றும் Z பிரிவு:அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு Z-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதில் CRPF கமாண்டோக்கள் மற்றும் தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோக்கள் உட்பட குறைந்தது 55 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

Z-பிளஸ் பாதுகாப்பில் பயணத்தின்போது குண்டு துளைக்காத வாகனம் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட் பாதுகாப்பு வானங்களும் அடங்கும்.

Z-பிளஸை விட சற்று குறைவான பாதுகாப்பை வழங்குவது Z-பிரிவு. கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இணைத்து 22 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

பாபா ராம்தேவ் மற்றும் நடிகர் அமீர் கான் போன்ற நபர்களுக்கு இந்த பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு தற்போது z பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Y-பிளஸ் மற்றும் Y பிரிவு

Y பிளஸ் பிரிவு பொதுவாக மிதமான ஆபத்தில் உள்ளதாகக் கருதப்படும் நபர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

பாலிவுட் நட்சத்திரம் மற்றும் மக்களவை எம்பி கங்கனா ரனாவத் போன்ற நபர்கள் நபர்கள் Y-பிளஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர்.

இதில் ஐந்து காலவர்கள், CRPF வீரர் ஒருவர் மற்றும்ந நான்கு கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

6 தனி பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்பில் சுழற்சி முறையில் காவல் இருப்பார்கள்.

Y பிளஸ்- ஐ விட சற்று குறைந்த அச்சுறுத்தல்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

Y பிரிவில் 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவர், ஸ்டென் துப்பாக்கியுடன் ஒருவரும் என 2 பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள்.

மொத்தம் 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பில் ஈடுபடுவர். இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

X பிரிவு X பிரிவு

மிகக் குறைந்த பாதுகாப்பை வழங்குகிறது. இதில் இரண்டு ஆயுதமேந்திய போலீஸ்காரர்கள் மட்டுமே உள்ளனர்.

கமாண்டோக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிடையாது. இது பொதுவாக குறைந்தபட்ச ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

இவ்வகை பாதுகாப்புகளின்படி, மத்திய அமைச்சர்கள், VVIPகள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பில் தேசிய பாதுகாப்பு படை (NSG ), இந்திய-திபெத்திய எல்லை காவல் படை (ITBP ) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF ), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.”,

Share.
Leave A Reply

Exit mobile version