மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தை, மகள் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய தந்தையும் 6 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version