இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகயிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை (20) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலை, துப்பாக்கிச் சூடு மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய “இரத்நாயக்க வீரகோன் அரோஷன் மதுஷங்க” என்பவரும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய “எரங்க புஷ்பகுமார ஹெட்யாராச்சி” என்பவருமே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 01.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version