அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதி அரசடிபகுதியில், கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்து நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஆலையடிவேம்பு சாயிராம் வீதியைச் சேர்ந்த 25, 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அரசடி பகுதியிலுள்ள வளைவில், அக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version