ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய பூங்காவில் உள்ள காட்டுப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (21) இரவு சுமார் 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் குறித்த சிறுவனை, பூந்தல தேசிய பூங்காவில் வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் சிறுவனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிறுவன் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுவன் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை, மேலும் சிறுவன் எப்படி இரவு நேரத்தில் இந்த அடர்ந்த காட்டுக்குள் வந்தார் என்பதும் தெரியவில்லை.

சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் தாம் பெலியத்த பகுதியில் வசிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த பூங்கா பெலியத்த பகுதியிலிருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version