பொலன்னறுவை,மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிபப் பெண் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனால் பிரதேசவாசிகளும், வயோதிபப் பெண்ணின் மகளும் குறித்த வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது கட்டிலுக்கு அருகில் வைத்து சடலத்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலமானது இன்று சனிக்கிழமை (22) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version