படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் அகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version