கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பிகொட்டுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் , கம்பிகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

வீட்டு வாடகை தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவர், கணவன் மனைவி இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதன்போது காயமடைந்த கணவன் கொலை செய்யப்பட்ட நபரின் கையிலிருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து அவரை பலமாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த சந்தேக நபரான கணவரும் மனைவியும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version