அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை இருவரும் உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டையும் இரத்து செய்தது.

ரஸ்யாவுடனான உடன்பாட்டிற்காக உக்ரைன் விட்டுக்கொடுப்புகளிற்கு தயாராகயிருக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த பின்னரே இருவரும் கடுமையாக உரையாட தொடங்கினார்கள்.

விட்டுக்கொடுப்பின்றி எந்த உடன்பாட்டிற்கும் வரமுடியாது நிச்சயமாக நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்யப்போகின்றோம் ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல அது பெரியதல்ல என டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை சந்திப்பின்போது அமெரிக்கஜனாதிபதி டிரம்பும் துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச செய்திகள் உக்ரைன் ஜனாதிபதி பிரச்சார பயணங்களில் ஈடுபடுகின்றார் என குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளன.

நீங்கள் தற்போது நல்ல நிலையில் இல்லை என டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது நன்றி தெரிவித்திருக்கின்றீர்களா என வான்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்திற்கு வந்து உங்கள் நாடு அழிக்கப்படுவதை பாதுகாக்க முயலும் நாட்டை விமர்சிப்பது மரியாதைக்குரிய விடயம் என கருதுகின்றீர்களா என டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டுள்ளார்.

அதன் பின்னர் கடும் எச்சரிக்கையுடான காலக்கெடுவை விதித்த டிரம்ப் உக்ரைன் உடன்பாட்டிற்கு வரவேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் விலகுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகும் உக்ரைனிற்கான ஆயுதஉதவியை நிறுத்தும் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் என்ன மாதிரி உணர்கின்றோம் என தெரிவிக்கவேண்டாம்,நாங்கள் பிரச்சினைக்கு தீர்வை காணமுயல்கின்றோம் நாங்கள் என்ன செய்யவேண்டும் என தெரிவிக்கும் நிலையில் நீங்கள் இல்லை,நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புட்டின் தனது முதலாவது பதவிக்காலத்தின் போது அரசியல் குற்றவியல் பிரேரணை மோசடி தொடர்பில் என்னுடன் பெரும் நரகத்தை எதிர்கொண்டார்,அவர் உடன்பாட்டிற்கு வரவிரும்புகின்றார் நீங்கள் உடன்பாட்டிற்கு வர தயாரா என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் உங்களை துணிச்சலானவராக மாற்றினேன்,அமெரிக்கா இல்லாமல் இவர் துணிச்சலானவராக காணப்படுவார் என நான் கருதவில்லை, ஆனால் நீங்கள் உடன்பாட்டிற்கு வரப்போகின்றீர்கள் அல்லது நாங்கள் வெளியேறுகின்றோம் நாங்கள் வெளியேறினால் நீங்கள் தனித்து போரிடவேண்டிவரும்,ஆனால் அது அவ்வளவு சிறந்ததாகயிருக்காது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கி நன்றி உணர்வுடன் நடந்துகொள்கின்றார் இல்லை என தெரிவித்து டிரம்ப் அந்த சந்திப்பை நிறைவு செய்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version