மாத்தறை, அக்குரெஸ்ஸ, நில்வளா கங்கையில் மிதந்த நிலையில் மனித கால் ஒன்று அக்குரெஸ்ஸ பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித கால் வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெலிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல்போயுள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

பொலிஸாரால் மீட்கப்பட்ட மனித கால் காணாமல்போன முதியவருடையது என காணாமல்போன முதியவரின் சகோதரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இது கொலையா அல்லது முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version