திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர், இருதயபுரம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடையிலிருந்து சேருவில் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு யாத்திரீர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் பெண்களும் மூன்று சிறுவர்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version