பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியை தனது அலுவலகத்தில் சந்தித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் ஜெலென்கியை பிரிட்டிஸ் மக்கள் 100 வீதம் ஆதரிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது 10 டவுனிங் ஸ்ரீட்டிற்கு வெளியே மக்கள் பாராட்டும் விதத்தில் கோசமிட்டதை சுட்டிக்காட்டிய பிரிட்டிஸ் பிரதமர்இது உங்களை எவ்வளவு தூரம் பிரிட்டிஸ் மக்கள் ஆதரிக்கின்றனர் உக்ரைனை ஆதரிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் என்றும் உங்களிற்கு ஆதரவாகயிருப்போம் என உக்ரைன் ஜனாதிபதியிடம் பிரிட்டிஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறான நண்பன் இருப்பது குறித்து எனது நாடு பெருமகிழ்ச்சியடைகின்றது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தின் ஆரம்பத்திலிருந்து பிரிட்டன் மக்கள் வெளிப்படுத்திவரும் ஆதரவிற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க உக்ரைன் ஜனாதிபதிகளிற்கு இடையிலான மோதலில் முடிவடைந்த வெள்ளை மாளிகை சந்திப்பின் பின்னர் ஜெலென்ஸ்கி பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version