“பாலிவுட்டில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. தமிழில் 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்திலும் நடித்து இருந்தார்.

இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார். அதன்பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

நடிகை ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக சூர்யா – ஜோதிகா குடும்பத்தார் மும்பையில் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யா கொடுத்ததில் சிறந்த பரிசு என்ன என்று கேட்டார். 

இதற்கு பதில் அளித்த நடிகை ஜோதிகா அவரே பரிசு தான் என்று கூறியுள்ளார். இவரது பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.”,

Share.
Leave A Reply

Exit mobile version