வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உளுந்து வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03) சென்ற ஒருவர் அங்கு உளுந்து வடை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த வடையை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட்ட போது அவ் வடைக்குள் பெரிய சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுததப்பட்டது.

இது, தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணவக முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version