புதுக்கடை நீதிமன்றத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்த்தாகவும் கூறியுள்ளனர்.

எனினும், இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, செவ்வந்தியைப் பற்றிய அனைத்து தகவல்களும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுபோன்ற நபர்களை இதற்கு முன்பும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இஷாரா செவ்வந்தி தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளாரா? என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version