யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு நேற்று திங்கட்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவனின் தந்தை இயந்திரத்தை வீட்டுக்கு முன்னே நிறுத்தி வைத்துள்ளார். இதன்போது, சிறுவன் உழவு இயந்திரத்துடன் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், உழவு இயந்திர சக்கரத்தில் சிக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version