அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் கம்பா பிரவீன், அமெரிக்காவில் முதுகலை அறிவியல் (Master of Science) படித்துக்கொண்டே மில்வாக்கியில் உள்ள ஒரு கடையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். பிரவீன் தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் கேஷம்பேட்டையைச் சேர்ந்தவர். மாணவர் உயிரிழந்தார்.

தெலங்கானா மாணவர்.. மகனின் மரணம் குறித்து மாணவனின் தந்தையான ராகவுலு கூறுகையில், “காலையில் எனது மகனிடம் வந்த அழைப்பை நான் தவறவிட்டிருந்ததை அறிந்து அவனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தேன். ஒரு மணிநேரம் கடந்தும் பதில் ஏதும் வராததால், மகனின் எண்ணுக்கு அழைத்தேன். ஆனால் போனை வேறு ஒருவர் எடுத்துப் பேசினார். இதனால் சந்தேகமடைந்த நான் தொடர்பைத் துண்டிதேன்.

ஏதாவது விபரீதமாக நடந்து விட்டதா என சந்தேகப்பட்டு மகனின் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்கள், எனது மகன் பகுதி நேரமாக அங்குள்ள கடை ஒன்றுக்கு வேலைக்குச் சென்றதாகவும், அங்கு நடந்த கொள்ளைச் சம்பவத்தில், கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், தோட்டா ஒன்று எனது மகனைத் தாக்கி அவன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.” என்றார்.

இதனிடையே சிகாகோவில் உள்ள இந்தியத் தூதரகம் பிரவீனின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மில்வாக்கியின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் முதுகலை படித்து வந்த மாணவர் பிரவீன் குமார் கம்பா, அகால மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தோம். நாங்கள் பிரவீனின் குடும்பம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதா பிரவீனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இது மிகவும் துரதிருஷ்டமான சம்பவம். நானும் மாணவர் பிரவீன் கொல்லப்பட்ட அந்த செய்தி குறித்து அறிந்தேன். மத்திய, மாநில அரசுகள் அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்கான நடைமுறைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என நான் கோருகிறேன். ஏனெனில் அவரது பெற்றோர் மிகவும் துயரப்படுவர். எனது பிரார்த்தனைகள் அவர்களுடன் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version