கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (05) கைது செய்யப்பட்டார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த மொசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.