விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஆடைகளை கழற்றி கத்தியபடி நிர்வாணமாக 25 நிமிடங்கள் உள்ளேயே ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை, அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் 733 புறப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென கேபினுக்கு அருகில் சென்று, விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் விமான ஊழியர்கள் அதற்கு மறுக்கவே, அந்தப் பெண் தன் உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.அந்தப் பெண்ணின் செயல்கள் முழு விமானத்திலும் பரபரப்பை ஏற்படுத்தின. சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.


ஒரு கட்டத்தில் விமானியின் அறைக் கதவை உதைக்க ஆரம்பித்தார். விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணை ஒரு போர்வையால் மூட முயன்றனர். ஆனால் அவர் அமைதியடையவில்லை.

இறுதியில், விமானி விமானத்தை மீண்டும் தரையிறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விமானம் மீண்டும் தரையிறங்கியவுடன் ஹூஸ்டன் போலீசார் அந்தப் பெண்ணைக் காவலில் எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர்.

இருப்பினும், அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயணிகளிடம் ஏற்பட்ட சிரமத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டு, பயணிகளுக்கு 50 டாலர் பயண வவுச்சரை வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version