சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியுள்ளது
252 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்காக ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். சுப்மன் கில்லும் அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்தார். 8வது ஓவரில், இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது.
18வது ஓவரின் முடிவில் இந்திய அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 103 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் பின்பே ஆட்டம் திசை மாறியது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி
அடுத்து களம் இறங்கிய விராட் கோலியும், 20வது ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி, 20வது ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தது.
ரோஹித் சர்மா – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாடி வந்தது. 27வது ஓவரின் முதல் பந்திலே ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில், ரோஹித் சர்மாவை, கீப்பர் டாம் லாதம் ஸ்டம்பிங் செய்து அவுட் செய்தார்.
அடுத்ததாக அக்சர் படேல் வந்து, ஷ்ரேயாஸ் ஐயருடன் களத்தில் சேர்ந்தார். நியூசிலாந்து அணி சிறப்பான ஃபீல்டிங் மூலம் இந்திய அணியின் ரன் குவிப்பை தடுத்தது. 15 ஓவர்களில் 91 ரன்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணி இருந்தது.
ரோஹித் சர்மா
38வது ஓவரில் கேப்டன் சாண்ட்னர் பந்து வீச்சில், ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்தினை ரச்சின் ரவீந்திரா கேட்ச் பிடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி 10 ஓவரில் 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.
கடைசி 10 ஓவரில் 60 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.
42வது ஓவரில் அக்சர் படேல் மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது. இந்த தொடரில் வெற்றி பெற இறுதி 5 ஓவர்களில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருந்தது. களத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இருந்தனர்.
ஆட்டத்தின் விறுவிறுப்பான கட்டத்தில் 48வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆனார். இதன் பிறகு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாட வந்தார்.
கடைசி 12 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 49வது ஓவரின் இறுதி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து, இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.
முதல் இன்னிங்ஸ்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணிக்காக ரச்சின் ரவீந்திரா – வில் யங் ஜோடி தொடக்க வீரர்களாக களம் கண்டது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இந்த இணை, மாயாஜால பந்துவீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் கலைந்தது. வருண், தான் வீசிய இரண்டாவது ஓவரில் வில் யங் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார்.
10வது ஓவரில் பந்து வீச வந்த குல்தீப் யாதவ், அவர் வீசிய முதல் பந்திலே ரச்சின் ரவீந்திராவை அவுட் ஆக்கினார். அடுத்து கேன் வில்லியம்சன் – டேரில் மிட்செல் ஆகியோர் விளையாடி வந்தனர்.
13வது ஓவரை மீண்டும் குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தினை கேன் வில்லியம்சன் அடிக்க, அதை குல்தீப் யாதவ் எளிமையாக கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது.
இதனால் இந்திய அணி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து கள நடுவரின் தீர்ப்பை உறுதி செய்தார். இதனால், இந்திய அணி ஒரு ரிவ்யூவை இழந்தது.
ஆனால் 24வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை, மீண்டும் டாம் லாதம் கால் காப்பில் வாங்கினார்.
மைதானத்தில் இருந்த நடுவர் இதனை, அவுட் என அறிவித்ததால், நியூசிலாந்து அணி ரிவ்யூ கேட்டது. கள நடுவரின் முடிவு சரியானதாக இருந்ததாக மூன்றாவது நடுவர் அறிவித்ததால், நியூசிலாந்து அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. டாம் லாதம் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக கிளென் பிலிப்ஸ் களமிறங்கினார். டேரில் மிட்செல் – கிளென் பிலிப்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சி செய்தனர்.
37வது ஓவருக்குள் இந்திய அணி, மோசமான பீல்டிங்கினால் நான்கு முறை விக்கெட்டுகள் எடுப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டது.
38வது ஓவரில் வருண் சக்கிரவர்த்தி வீசிய பந்தில், கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். மைக்கேல் பிரேஸ்வெல் அடுத்து களம் இறங்கினார்.
40வது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை சேர்த்திருந்தது. இதற்கு பிறகு மைக்கேல் பிரேஸ்வெலின் சிறப்பான ஆட்டத்தினால் ஆட்டம் சூடு பிடித்தது. அவர் மாறி மாறி பவுண்டரி மற்றும் சிக்ஸ்-களை விலாச ஸ்கோர் உயர்ந்தது
சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்செல்- மைக்கேல் பிரேஸ்வெல் இணை, 46வது ஓவரில் கலைந்தது. முகமது ஷமி வீசிய பந்தினை டேரில் மிட்செல் தூக்கி அடிக்க, அதை ரோகித் சர்மா கேட்ச் பிடித்தார். டேரில் மிட்செல் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்
நியூசிலாந்து அணியின் துருப்புச்சீட்டு பேட்ஸ்மேனாக இருந்த மைக்கேல் பிரேஸ்வெல், 39 பந்துகளில் 49.5 ஓவரில் அரை சதம் அடித்தார்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட்டு இழப்புக்கு 251 ரன்களை சேர்த்திருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், இதுவே நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் ஆபத்பாந்தவனாக இருந்தார்.
முன்னதாக, நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை இழந்துள்ளார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை அவர் சமன் செய்திருப்பதாக இஎஸ்பிஎன் இணையதள புள்ளிவிவரம் தெரிக்கிறது.
நியூசிலாந்து அணியில் ஒரே மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஹென்றிக்குப் பதிலாக நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டார். இந்திய அணியைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்கியது.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
நியூசிலாந்து அணி
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் யான்சென், வில்லியம் ஓ’ரூர்க்கி, நேதன் ஸ்மித்.