2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 சுற்றுலாத் தலங்களின் பட்டியலை ‘டைம்’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் ‘பீக்கோ டிரெயில்’ முதலிடம் பிடித்துள்ளது.
‘பீக்கோ டிரெயில்’ என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டின் வழியாக 300 கிலோமீட்டர் ஒரு தொலைதூரப் நடைப்பயணமாகும்.
இந்த 22 நிலை நடைப்பயணமானது ஆசியாவின் தெற்கில் உள்ள மிகச்சிறந்த சூழலியல் மற்றும் மலைப் பகுதிகள் வழியாக அழைத்துச் செல்லும். நடைப்பயணம் கண்டியில் இருந்து ஆரம்பித்து ஹப்புத்தளை, எல்ல வழியாக நுவரெலியாவுக்குச் செல்கிறது.