புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சூரியவெளி – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த இளைஞன் தேவாலயம் ஒன்றில் பணி செய்வதற்காக 28ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்றுள்ள நிலையில் கடந்த 12ஆம் திகதி மீண்டும் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இந்த இளைஞன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முய்ன்ற போது எதிர்த்திசையில் பயணித்த பட்டா ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் இந்த இளைஞன் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version