சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று சனிக்கிழமை (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக மது போதையில் இருந்த சந்தேக நபர் இரண்டு பெண் விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்துள்ளார்.

இதன்போது, விமான பணிப்பெண்கள் சம்பவத்தை விமானிக்கு தெரிவித்ததை அடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விமானம் விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் அதிக அளவில் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேக நபர் இன்று (16) கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version