“சென்னை,சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடகராக பிரபலமானவர் ஷிவாங்கி. பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கி கொண்டார்.
இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்ற ஷிவாங்கி, ‘டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசே தான் கடவுளடா’ ஆகிய படங்களில் நடித்தார். இப்போது சினிமாவில் தன் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் பிரபலமான ஆரம்ப காலத்தில் ஹோம்லியான உடைகளில் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது, நான் குட்டையான உடையில் போட்டோ வெளியிடுவது பட வாய்ப்புக்காக தான் என என்னை பலரும் விமர்சிப்பது பற்றி பேசி இருக்கிறார்.
அதாவது, “நான் எப்போதும் இறுக்கமான உடைகளை போடா மாட்டேன். முதலில் குட்டையான உடைகளை அணிவதில் எனக்கு தயக்கம் இருந்தது.
பின்னர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போது அவற்றை அணிய ஆரம்பித்தேன். தற்போது அவற்றை விரும்பி அணிய ஆரம்பித்துள்ளேன்.
நான் என் மகிழ்ச்சிக்காக தான் அப்படி செய்தேன். பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக்கொண்டிருக்க முடியுமா.
ஆடைகளை அவிழ்த்து கட்டினால் வாய்ப்பு கிடைத்து விடுமா? எனக்கு ஆத்திரம் வருகிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் ஆடிசன் செல்ல வேண்டும். அங்கு திறமையை காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், இவர்கள் அவிழ்த்துப் போட்டால் வாய்ப்பு கிடைத்துவிடும் என நினைக்கின்றனர். ஆடை என்பது ஒருவரின் விருப்பம் என்பதை எப்போது புரிந்து கொள்ள வேண்டும்\” என்று தெரிவித்துள்ளார். “,