யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.